17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீடு புகுந்து பெண் உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு பெண் உயிரிழப்பு, ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி..

வீடு புகுந்து பெண் உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு பெண் உயிரிழப்பு, ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி..

எழுதியவர்: ஆசிரியர் May 2, 2019, 9:03 pm

மதுரை அருகே s.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அருவாள் சுரேஷ். இவர் கோகுலன் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த நிலையில் கடந்த 6 மாத்திற்கு முன்பு ஒரு வழக்கு சம்பந்தமாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அருவாள் சுரேஷ் மனைவி வீட்டை விட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் அருவாள் சுரேஸ்  அருகில் குடியிருந்த மலர்கொடி என்பவரிடம் தனது மனைவி குறித்து கேட்டுள்ளார். அவர் சரியாக பதில் சொல்லாததால் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்ட சிறிது நேரத்தில் சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளல் மலர்கொடியை முகம், உடல் என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

அதனை தடுக்க வந்த மலர்கொடியின் அக்கா மகன் சுரேஷ் என்பவருக்கும் அரிவாள் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவ இடத்தில் கூடல்புதூர் காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தி உயிரிழந்த மலர் கொடி உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்ர். இவர்களை வெட்டிய அரிவாள் சுரேஷ் ஜெய் ஹிந்த்புரத்தில் பதுங்கிய போது காவல் துறையினர் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!