18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்போன் மூலம் பாலியலுக்கு அழைத்த முதியவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் உசிலம்பட்டியில் பரபரப்பு..

செல்போன் மூலம் பாலியலுக்கு அழைத்த முதியவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் உசிலம்பட்டியில் பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 2, 2019, 4:48 pm

மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது செல்போனுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ராங்க்கால் வந்த்தாகவும், எதிரே பேசியவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவரை திட்டிவிட்டு அழைப்பை துண்டித்த செல்விக்கு மீண்டும் தொடர்ந்து அடிக்கடி கால் செய்து பாலியல் ரீதியாக அழைத்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது..

இதனை தனது கணவர் ராஜாவிடம் தெரிவித்த நிலையில் உறவினர் இணைந்து ராங்க்காலில் பாலியல் துன்புறுத்தும் மர்ம நபருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது ஆசைப்படியே நேரில் சந்திக்க எங்கு வரவேண்டும் என பேச்சு கொடுத்து, அவரது உரையாடலை வைத்து உசிலம்பட்டிக்கு உறவினர்களுடன் வந்த அந்த பெண் 55 வயது மதிக்கத்தக்க அந்த மர்ம நபரை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்..

மேலும் அவரை விசாரனை நடத்தியதில் அவர் உசிலம்பட்டி சன்னாசி தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும் இவருடன் கூட்டணியில் யாரும் உள்ளனரா என உசிலம்பட்டி நகர் காவல்நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் மோகன் உசிலம்பட்டி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!