17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து 464 மது பாட்டில்கள் திருட்டு..

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து 464 மது பாட்டில்கள் திருட்டு..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 8:50 pm

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் (தெற்கு) இசிஆர்., சாலை ஓரம் டாஸ்மாக் கடையில் நேற்று வியாபாரம் முடிந்து, இரவு 10 மணிக்கு கடையை விற்பனையாளர் மோகன் குமார் பூட்டி விட்டு வீடு திரும்பினார்.

இன்று (01/05/2019) மதியம் ஒரு மணியளவில் கடை ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்தது. தகவலின் பேரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் எமனேஸ்வரம் நாகராஜன் உள்ளே சென்று பார்த்தார். மது பாட்டில்கள் திருடு போனது தெரிந்தது. ரூ.83, 350 மதிப்பிலான 464 மது பாட்டில்கள் திருடு போனதாக நாகராஜன் பேரில், கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!