17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழமையை போற்றும் விதத்தில் சூடுபிடிக்கும் பழைய சோறு விற்பனை..ஐந்து நட்சத்திர உணவகங்களிலும் கஞ்சி விற்பனை..

பழமையை போற்றும் விதத்தில் சூடுபிடிக்கும் பழைய சோறு விற்பனை..ஐந்து நட்சத்திர உணவகங்களிலும் கஞ்சி விற்பனை..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 8:36 pm

முன் எப்போதும் இல்லாத நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெயிலுக்கு இதமான பழைய சோறு விற்பனையை திண்டுக்கல்லில் உள்ள பிரபலமான மூன்று உணவகங்கள் துவக்கி உள்ளது.

பிரியாணிக்கு மட்டுமே! பெயர் பெற்ற திண்டுக்கல்லில் தற்போது பழையசோறு விற்பனையும் சூடுபிடித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு வியாபாரமும் கலைகட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் சமீபத்தில் மதுரையில் பழைய கஞ்சி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மதுரையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் காலை நேர உணவு வகைகளில் ஒன்றாக கஞ்சி மற்றும் மாங்காய் ஊறுகாய் வைத்திருந்ததும் புதுமையாக இருந்தது.  பழைய கஞ்சி விற்பனை பழைமையான உணவை உயிரூட்டவா அல்லது அதையும் புதுமையான வியாபார யுக்தியா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!