18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சர்வதேச போட்டிக்கு தேர்வான எஸ்ஐ மகளுக்கு எஸ்பி முரளி ரம்பா வாழ்த்து..!

சர்வதேச போட்டிக்கு தேர்வான எஸ்ஐ மகளுக்கு எஸ்பி முரளி ரம்பா வாழ்த்து..!

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 4:49 pm

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச சிலம்பம் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள உதவி ஆய்வாளர் மகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வாழ்த்து தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி வரையுள்ள 3 நாட்கள் சிலம்ப விளையாட்டுக்கான தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா, மலேசியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 600 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இவர்களில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஜெயமணியின் மகள் ஸ்வேதா மூன்றாவது இடத்தை பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பம் விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஸ்வேதாவை அழைத்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், போட்டியில் வெற்றி பெற தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!