18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் திடீர் ஆய்வு..

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் திடீர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 4:37 pm

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் இன்று ராமேஸ்வரம் வந்தார். மதுரை கோட்ட ரயில்வே உதவி மேலாளார் ஓ.பி.ஷா, மதுரை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடன் வந்தனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம், பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் ஆய்வு செய்தனர்.

இராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், ரயில் நிலைய சுகாதாரம், பாம்பன் ரயில் தூக்கு பாலம் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு நடத்தினர்.

இராமேஸ்வரம் ஆய்விற்கு பின் லெனின் கூறியதாவது: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா தலங்களை இணைக்ககும் புதிய ரயில்கள், பயணிகளின் தேவைக்கு ஏற்ப ராமேஸ்வரத்திற்கு தினமும் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இலங்கை தொடர் வெடி குண்டு சம்பவம் எதிரொலியாக ராமேஸ்வரம் ரயில் நிலையம், பாம்பன் ரயில் பாலம் ஆகிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார், வெடி குண்டு நிபுணர்கள் முழு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!