17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தலுக்குப் பின் 40 திமுக எம்எல்ஏக்கள் அதிமுக விற்கு தாவுவார்கள்”: கே.டி. இராஜேந்திர பாலாஜி..

தேர்தலுக்குப் பின் 40 திமுக எம்எல்ஏக்கள் அதிமுக விற்கு தாவுவார்கள்”: கே.டி. இராஜேந்திர பாலாஜி..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 3:17 pm

இடைத்தேர்தல் முடிந்த உடன் 40திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளனர்” என பால்வளத்துறை துறை அமைச்சர் கே டி .ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளான வெள்ளபட்டி, துப்பாஸ் பட்டி,தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மோகனை ஆதரித்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, விஜயபாஸ்கர், காமராஜ்,ராஜேந்திர பாலாஜி என ஐந்து அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு  பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலின் 25நாட்களில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்றார் அவர் பகல் கனவு காண்கின்றார் ஸ்டாலின் அவரது தந்தையால்  முடியாததை அவர் முயற்சி செய்து முயற்சி செய்து அதிமுகவை அழிக்க பார்த்தார் கடைசிவரை முடியவில்லை ஸ்டாலினும் அதைபோல் ஏமாந்து போகபோகின்றார்  

இந்த ஆட்சி இந்த இரண்டு ஆண்டுகாலம் நீடிக்கும் அதற்கு மேல் நடைபெறும் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி  மீண்டும் முதல்வராக வருவார் என்ற அவர், ஸ்டாலின் சொல்கிறார் அதிமுகவில் இருந்து நான்கு,ஐந்து எம் எல் ஏக்களை இழுத்துவிடுவாராம் நாங்கள் நினைத்தால் 40எம் எல் ஏக்களை திமுகவில் இருந்து இழுக்க முடியும் திமுக எம் எல் ஏக்கள் அங்கே நோந்துபோய்,வெந்துபோய் இருக்கின்றார்கள் அந்த கட்சியில் இருக்கலாம வேண்டாம என்று கலைஞர் மறைவிற்கு பிறகு திமுக கட்சியின் கட்டமைப்பை குலைந்து விட்டது என்று கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!