18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பசும்பொன் நினைவிடத்தில் புதிய கட்சி துவக்கம்..

பசும்பொன் நினைவிடத்தில் புதிய கட்சி துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 3:06 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில்வீரத்தமிழர் எழுச்சிக் கழகம் என்னும் அமைப்பை துவங்கி கொடியை வீரன் செல்வராஜ் அறிமுகம் செய்தார்.

வீரன் செல்வராஜ் கூறியதாவது:  உழைப்பாளர் தினமான இன்று (01/5/2019) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் வீரத் தமிழர் எழுச்சி கழகம் என்னும் கட்சியை எனது இளைஞர்கள் பட்டாளத்தோடு ஆரம்பித்திருக்கிறேன் .

இந்த வீரத் தமிழர் எழுச்சி கழகம் உருவாக காரணம், தமிழகத்தில் திராவிடத்தை அழித்து தமிழ் இனத்தை காக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இந்த திராவிட கட்சிகள் அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறுகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும்.  அவ்வாறு முன்னேற வேண்டும் என்றால் அரசியல் அங்கீகாரத்தை கைப்பற்ற வேண்டும் . அதற்கு, நம் தமிழர் சமுதாய இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான் இந்த இயக்கத்தை தொடங்கி இருக்கிறேன். இந்த இயக்கமானது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கமானது எப்போதும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காது  என கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!