18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் குப்பையோடு குப்பையாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் துப்புரவு தொழிலாளர்கள்…

மதுரையில் குப்பையோடு குப்பையாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் துப்புரவு தொழிலாளர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 2:43 pm

மதுரை மாநகராட்சி குப்பைகளை அள்ளும் ஒப்பந்த ஊர்தி ஒன்று மாடக்குளம் மெயின் பகுதியில் பணிகளை முடித்துக்கொண்டு குப்பைகளுடன் ஒப்பந்த பணியாளர்களை டிராக்டரின் முன் சக்கரத்தில் இரு பெண்களும்,  டிராக்டர் டிரைவர் அருகில் இருபுறமும் மூன்று மூன்று பெண்களும்,  மேலும் பிராக்டர் டிரைலரின் லிங்கில் ஒருவரும்,  டிராக்டர் டிரைலர் மேல் என சுமார் ஐந்து பேருக்கு மேல் குப்பைகளோடு அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள அனுமதி கொடுத்தது யார்?  விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நீதி கிடைக்குமா?? எதுவும் அறியாமல் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்களை மனிதர்களாக எண்ணாமல் குப்பையோடு குப்பையாக கொண்டுவந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் TN69X1019 டிராக்டர் ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா????

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!