18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இடிமின்னல் காரணமாக இறந்த ஆடுகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்.

இடிமின்னல் காரணமாக இறந்த ஆடுகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்.

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 2:25 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் வாசி (32). இவர் வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்த்துவிட்டு பட்டியில் அனைத்து ஆடுகளையும் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்படும்.

இந்நிலையில் கடந்த 2தினங்களுக்கு முன்பு இடி, மின்னல் காரணமாக பட்டியில் அடைத்து வைத்திருந்த மொத்தம் 9 ஆடுகள் பலியாயின. இதனைத்தொடர்ந்து ஆடுகள் பலியானதில் மன உழைச்சலுக்கு ஆளான வாசி என்பவர் இறந்த ஆடுகளுக்கு அரசு சார்பில் தகுந்த இழப்பீடு வழங்கக்கோரி அங்கிருந்த உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் வாசியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து தீயனைப்புதுறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். பின்பு அவரை போலீசார் விசாரனைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரனை நடத்திவருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!