கஜா புயலால் பாதித்த புதுக்கோட்டை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவிய ராமநாதபுரம் பாத்திமா டிரஸ்ட் கல்வி நிறுவனங்கள் தாளாளரை இராமராதபுரம் அரசு கல்லூரி முதல்வர் பாராட்டினார்.
இராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள், மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையம் சார்பில் பட்டமளிப்பு விழா, 11 ஆம் ஆண்டு விழா நடந்தது. பாத்திமா டிரஸ்ட் கல்வி நிறுவனங்கள் தாளாளர் ஏ.முகமது சலாவுதீன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி நிறைவு செய்த 75 பட்டதாரிகளுக்கு ஆய்வு நிறைஞர் பட்டம், ஏசி மெக்கானிக் மாணவர்களுக்கு சான்றிதழ்களை, இராமநாதபுரம் அரசு கல்லூரி முனைவர் க.முதல்வர் மகுதம்மாள் வழங்கினார்.
அவர் பேசியதாவது: உயர் ஜாதி ஆண்களுக்கு மட்டும் கல்வி கற்க முடியும் என்ற நிலை படிப்படியாக மாறி சமுதாய மாற்றத்திற்கு அனைவருக்கும் கல்வி என காலச் சக்கரம் மாறியது. பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்று ஆண்களை பின்னுக்கு தள்ளி பல்வேறு துறைகளில் மகளிர் முன்னேறி வருகின்றனர். தங்களாலும் சாதிக்க இயலும் என்பதை பட்டம் பெற்ற பெண்கள் நிரூபித்துள்ளனர். கடந்தாண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதித்த புதுக்கோட்டை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவிய ராமநாதபுரம் பாத்திமா டிரஸ்ட் கல்வி நிறுவனங்கள் தாளாளர் முகமது சலாவுதீனை பாராட்டுவதில் மகிழ்கிறேன். பெண்களின் கல்வி முன்னேற்றத்தில் சலாவுதீன் பெரும் முயற்சி பாராட்டுக்குரியது என்றார். சேதுபதி அரசு கலை கல்லூரி பொருளியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.















You must be logged in to post a comment.