18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே வேலை வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..

நிலக்கோட்டை அருகே வேலை வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 9:36 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே   முசுவனூத்து ஊராட்சியில் அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலையில் தனியார் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் சுமார் 500 மேற்பட்டவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்கள்.    இந்த  மில்லில் வேலை செய்த 2 நபர்களை  கர்நாடகா பகுதிக்கு பணியிட மாறுதல் செய்ததாக கூறப்படுகிறது.                  இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம்  நடத்தினார்கள்..                       இதனைத் தொடர்ந்து மில் நிர்வாகம் நிர்வாக காரணத்தை காட்டி மில்லை தற்காலியமாக மூடினார்கள்.

இதன் காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட வேலை செய்யத் தயாராக இருக்கிறோம் என  பெண்கள் உள்பட தொழிலாளர்கள் வேலை வேண்டி உடனடியாக  நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே  பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து                    நிலக்கோட்டை தாசில்தார் மற்றும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி மற்றும் அதிகாரிகளிடம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வேலை கொடுத்த எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய இந்த மில்லை உடனடியாக திறக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மனு கொடுத்தனர். அதன்பின்னர் திண்டுக்கல் தொழிலாளர் நல வாரிய அதிகாரியிடம் மனு கொடுக்க பத்துக்கு மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். மேலும் மின் நிர்வாகம் சார்பாக தொழிற்சாலையில் மின் சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் சேதப்படுத்தியதாக நிலக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!