18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே 58 கிராம மக்கள் ஒன்றினைந்து கொண்டாடும் திருவிழா..

உசிலம்பட்டி அருகே 58 கிராம மக்கள் ஒன்றினைந்து கொண்டாடும் திருவிழா..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 12:54 pm

உசிலம்பட்டி அருகே 58 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் அத்திபட்டி புதுமாரியம்மன் கோவில் திருவிழா, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் அமைந்துள்ளது புதுமாரியம்மன் திருக்கோவில் இந்த கோவில் ஆண்டு தோறும் சித்திரை மாதல் வெகுவிமர்சையாக சுமார் 58 கிராமங்கள் ஒன்றிணைந்து திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த ஆண்டு திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று 58 கிராமங்களிலிருந்தும் சுமார் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி, சாமி சிலைகளுடன் கூடிய முளைப்பாரி எடுத்து வந்து புதுமாரியம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினா்…

இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!