18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டி 5 லட்ச ரூபாய்க்கான காசோலை அன்பளிப்பு..

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டி 5 லட்ச ரூபாய்க்கான காசோலை அன்பளிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 11:33 am

கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், திருச்சி முடிகண்டம் பகுதியை சேர்ந்த கோமதி கலந்துக் கொண்டார். இதில், மகளிர் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் தந்தார்.

ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு பாராட்டும் விதமாக ஐந்து லட்ச ரூபாய் ஊக்கத் தொகையினை திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில பொறுப்பாளர்கள் நடிகர் விஜய் சேதுபதி சார்பாக காசோலையினை வழங்கினார்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி கோமதியிடம் தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின் போது விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில செயலாளர் குமரன், திருச்சி மாவட்ட தலைவர் சந்துருசேது, சென்னை மாவட்ட செயலாளர் தேவா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் விக்கி, மணிகண்ட ஒன்றியத் தலைவர் திலீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கீழை நியூஸுக்காக:- திருச்சி: திலீப்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!