17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜசிங்கமங்கலத்தில் மாபெரும் மருத்துவ முகாம்..

இராஜசிங்கமங்கலத்தில் மாபெரும் மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 1:02 am

இராஜசிங்கமங்கலம் இஸ்லாமிய சோசியல் சர்வீஸ் மலேசியா, அல்நூர் அசோசியேசன் துபாய் மற்றும் மதுரை அரோமா மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் இராஜசிங்கமங்கலத்தில் 28.04.2019 இன்று நடைபெற்றது.

மருத்துவ முகாமை இஸ்லாமிய சோசியல் சர்வீஸ் மலேசியா நிர்வாக குழு உறுப்பினர்கள் பர்வீஸ்கான் மற்றும் பகுர்தீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பொது மருத்துவ முகாமில் சிறப்பு சிகிச்சைகளாக சர்க்கரை மற்றும் இருதய நோய், நுரையீரல் சிகிச்சைகள், மூளை நரம்பியல், மனநல சிகிச்சைகள் மற்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் மிகச்சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அல்நூர் அசோசியேசன் துபாய் சார்பாக அமீன், தர்வீஸ், ஹபீப், இம்ரான், ஆசிரியர் பாதுஷா ஆகியோர் பொதுமக்களை வரவேற்று முகாமை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக இராஜசிங்கமங்கலம் ஜமாத் தலைவர் அன்வர், இராஜசிங்கமங்கலம் காவல்துறை ஆய்வாளர் ரகு , இந்துப் பேரவை தலைவர் ஞானம் மற்றும் சங்கர், பொறியாளர் சகுபர் , இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

மருத்துவ முகாம் தன்னார்வலர்களாக சாகுல், ரிஸ்வான், கபீப், அப்சர், முஹம்மது ஷஜ்வான் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இராஜசிங்கமங்கலத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!