18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் பாவேந்தர் பாரதிதாசனின் 128-வது பிறந்தநாள் விழா..

நெல்லையில் பாவேந்தர் பாரதிதாசனின் 128-வது பிறந்தநாள் விழா..

எழுதியவர்: ஆசிரியர் April 29, 2019, 9:18 pm

நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் அரசு அருங்காட்சியகம் இணைந்து நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் 128-ஆவது பிறந்த நாள் கவிஞர்தின விழா இன்று 29.04.2019-மாலை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வரவேற்புரை வழங்கினார்.

கவிஞர்கள் பாப்பாக்குடி செல்வமணி,மஞ்சுளா, கமல லியானோ சில்வேரா,காஜா மைதீன்,அனீபா ஆகியோர் கவிதை வாசித்தனர். திருக்குறள் இரா.முருகன், நல்லாசிரியர் வை.இராமசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நெல்லைமாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் கா.பொ.இராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக பாவேந்தர் பாரதிதாசன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.கவிஞர் சுப்பையா நன்றி கூறினார்.விழாவில் வட்டாட்சியர் (ப.நி)வலன்சியா, வழக்கறிஞர் பாரதி முருகன், திருவள்ளுவர் கல்லூரி நூலகர் முனைவர் பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கவிஞர் பே.இராஜேந்திரனுக்கு தமிழ்த் துறைத் துணை இயக்குநர் இராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!