17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதல்வர் பழனிச்சாமியை கொல்லப்போவதாக மிரட்டிய திண்டுக்கல் சந்துருவை கைது செய்தது போலீஸ்…

முதல்வர் பழனிச்சாமியை கொல்லப்போவதாக மிரட்டிய திண்டுக்கல் சந்துருவை கைது செய்தது போலீஸ்…

எழுதியவர்: ஆசிரியர் April 29, 2019, 12:42 am

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொடைக்கானலில் வைத்து கொல்லப்போவதாக மிரட்டிய திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பவரை போலீசார் கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் அடையாளம் தெரியாத மர்ம நபர், ஒருவர் பேசினார். அப்போது அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப்போவதாக மிரட்டிவிட்டு போனை வைத்துள்ளார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த நபர் எந்த ஊரீல் இருந்து மிரட்டினார் என்பதை விசாரித்ததில், திண்டுக்கல்லில் இருந்து அந்த மர்ம நபர் மிரட்டியதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்திய திண்டுக்கல் போலீசார், சந்துரு என்பவர் தான் மிரட்டினார் என்பதை கண்டுபிடித்ததோடு அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்வர் பழனிச்சாமி வீட்டுக்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இப்போது அவரை கொல்லப்போவதாக ஒருவர் போலீசுக்கே போன் போட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!