சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையின் படி வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி மற்றும் 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஃபானி என்று பெயரிடப்பட்ட புயலின் தாக்கம் இருக்கக்கூடுமென 25.4.2019 ஆம் தேதி விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிக்கென சிறப்பு பயிற்சி SDRF பயிற்சி முடித்த 22காவலர்கள் மற்றும் 13 ஊர்காவல் படையினரை தலைமயிடத்திற்கு வரவழைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்புப் பணிக்கு உதவும் வகையில் உபயோகிக்க கூடிய உபகரணங்கள் தனி வாகனத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இதேபோன்று அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மேற்கூறிய உபகரணங்களுடன் அந்தந்த காவல் நிலையத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு வீ.பாஸ்கரன்* அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் மின்சார துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளுடன் தொடர்பு வைத்து பேரிடர் ஏற்படும் பட்சத்தில் நிலைமையை எதிர்கொள்ள தயார் நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.