17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தால் கடுமையான நடவடிக்கை!’ – மதுரை புதிய ஆட்சியர் உறுதி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தால் கடுமையான நடவடிக்கை!’ – மதுரை புதிய ஆட்சியர் உறுதி

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 7:23 pm
திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என மதுரையில் புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உறுதியளித்துள்ளார்.
மக்களைவத்தேர்தல் முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டுச் செல்லபட்டன. மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாசிரியர் சம்பூரணம் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளே நுழைந்து ஆவணங்களை எடுத்தாக சர்சை கிளம்பியது. இது தொடர்பாக மதுரை மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி, வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியை மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியாக எஸ்.நாகராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதி ஏற்பாடுகள் செய்ய ஆலோசனை மேற்கொண்ட பின் முடிவு எடுக்கப்படும். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படும். அங்கு பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருப்பரங்குன்றத்தில் கூடுதலாக பறக்கும் படை நியமிக்கப்படும். நாளை முதல் தேர்தல் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்” என்று கூறினார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!