17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்காக கீழக்கரை சி.எஸ்.ஐ சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை..

இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்காக கீழக்கரை சி.எஸ்.ஐ சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 5:49 pm

கீழக்கரை சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தில் இன்று ஞாயிறுக் காலை வழிபாட்டில், இலங்கையில் நடைபெற்ற தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்களில் வீர மரணம் அடைந்த மக்களுக்காக இரங்கல் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. சபை மக்கள் அனைவரும் தன்னார்வமாக மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி ஜெபித்தார்கள்.

மேலும், இலங்கை தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், அந் நாட்டின் மக்களினுடைய மன அமைதிக்காகவும் தொடர்ந்து அனைத்து இல்லங்கள் தோறும் சிறப்பு மன உருக்க ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு வருகின்றன என சபை ஆயர், கீழக்கரை ஆயர் வட்டம் தெரிவித்தார்.

அதே போல் இன்று அத்தியட்சபுரம் திருச்சபையில் இலங்கையில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்தும், அத் தாக்குதல்களில் வீர மரணமடைந்த அப்பாவி மக்களுக்காக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவிக்கப் பட்டது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!