17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பேருந்து நிலையத்தில் இடையூறாக இருக்கும் ஷேர் ஆட்டோக்கள்..

மதுரை பேருந்து நிலையத்தில் இடையூறாக இருக்கும் ஷேர் ஆட்டோக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 4:47 pm

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தினத்தந்தி பாலத்தில் மேலே ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு காயம் மற்றும் உயிர் பலி ஏற்படுகிறது.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து காயம் மற்றும் உயிர் பலியை தடுக்க பாலத்தின் மேலே நிற்கும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இதனால் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!