நிலக்கோட்டையில் காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் சமரசம் செய்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இபி காலனியை சேர்ந்த முனியப்பன் மகள் சத்யா வயது 21 இவர் பி.காம் பட்டதாரி அதே போல நிலக்கோட்டை அப்பாவுபிள்ளைபட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் விஜயனுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. நாளடைவில் விஜயன் சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சத்யா திருமணத்திற்கு வற்புறுத்தவே விஜயனும் மற்றும் அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து சத்யா நிலக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். நிலக்கோட்டை மகளிர் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் லதா, வழக்கறிஞர்கள் வேல்முருகன், தங்கப்பாண்டி விஜயன் மற்றும் சத்யா பெற்றோர்கள் ஆகியோரை அழைத்து காவல் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.. அதில் சமரசம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் போலீசார் முன்னிலையில் விஜயனும் லதாவும் மாலை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் நிலக்கோட்டை துர்க்கையம்மன் கோவிலுக்கு சென்று முறைப்படி தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர்.




You must be logged in to post a comment.