18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் வருகை மற்றும் விருது வழங்கும் விழா…

ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் வருகை மற்றும் விருது வழங்கும் விழா…

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 12:23 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா, ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன், துணை ஆளுநர் பார்த்த சாரதி, மாவட்ட து.செயலாளர் ஆவுடையப்பன், பட்டயதலைவர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக சமூக சேவை செய்த கீழக்கரை பிஎஸ்எம் (10 ரூபாய்) மருத்துவமனை நிறுவனர் ஹபிபுல்லாஹ் கான் சார்பில் மேலாளர் அகமது பிலாலுக்கும் , இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரத்திற்க்கும், எஸ்.பி.சிஐடி எஸ்.ஐ ஜேம்ஸ்க்கும், கீழக்கரை மிஷன் மருத்துவமனை மருத்துவர் சிவகெளசல்யாவிற்க்கும் விருது வழங்கப்பட்டது.

மேலும் இதில் செயலாளர் செய்யது முகம்மது ஹசன்,பொருளாளர் முனியசங்கர், டாக்டர் ராசிக்த்தீன், மரியதாஸ்,வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரராமவன்னி,சோமு உட்பட ஏராளமான ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source:/ Sunrise, Balaji
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!