18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூய்மை இந்தியா திட்டம் சரியாக செயல்படுகிறதா?குப்பைகள் நிறைந்து காணப்படும் பெரிய வெண்மணி சாலை..

தூய்மை இந்தியா திட்டம் சரியாக செயல்படுகிறதா?குப்பைகள் நிறைந்து காணப்படும் பெரிய வெண்மணி சாலை..

எழுதியவர்: ஆசிரியர் April 27, 2019, 12:21 am

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் இருந்து பெரிய வெண்மணி கிராமத்திற்கு செல்ல நான்கு கிலோமீட்டர் வரை மெட்டல் சாலை அமைக்கப்பட்டது .குன்னம் பெட்ரோல் நிலையம் அருகில் இருந்து இந்த சாலை செல்கிறது.

இந்த சாலையின் முகப்பு பகுதியில் குப்பைகளை கொட்டப்பட்டு சாலைகளை மூடிய நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல மிகப் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த குப்பைகளை இங்குள்ள நிர்வாகம் சுத்தம் செய்வது இல்லை.இந்த இடத்தை சுத்தம் செய்வதும் இல்லை.

இங்கே குப்பைகள் கொட்ட கூடாது என்று அறிவிப்பு பலகையும் இல்லை.. இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் குப்பை கொட்டும் பகுதியாகவும் , இதே இடத்தில் மலஜலம் கழிப்பதுமாக மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலை உள்ளது. குப்பைகள் அள்ளாமல் இருப்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை சுத்தம் செய்வதோடு இனி இங்கு குப்பைகள் கொட்டப்படாமலிருக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்குமாறு மக்கள் பாதை அமைப்பு சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!