18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பனில் 1,634 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவருக்கு வலை..

பாம்பனில் 1,634 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவருக்கு வலை..

எழுதியவர்: ஆசிரியர் April 26, 2019, 12:46 pm

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மண்டபம் இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி தலைமையில் போலீசார் 25/4/2019 காலை ரோந்து சென்றனர். பாம்பன் விவேகானந்தர் நகரில் ரோந்து சென்ற போது குறுகிய பாதையில் சந்தேகத்திற்கிடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் நெருங்கியதும் தப்பி ஓடினர்.

அங்கு 1,286 மது பாட்டில்கள், 348 பீர் பாட்டில்கள் கேட்பாரற்று இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில், சட்ட விரோதமான விற்பனைக்கு மது பாட்டிலகள் பதுக்கி வைத்தது என தெரிந்தது. இது தொடர்பாக தப்பியோடிய ரவி, முருகேசன் ஆகியோர் பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!