தூத்துக்குடி தெய்வச்செயல்புரம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஸ்டெர்லைட் போராட்டங்கள், நிலத்தடி நீர், ஹைட்ரோகார்பன் போன்ற பல்வேறு மக்கள் நலன்
சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவர் பின்வரும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பலவித செயல்திட்டங்களை செய்வதாக பின்வரும் வாக்குறுதிகளை அளித்தார்.
1. மானாவாரி நிலங்கள் பயன் பெற தாமிரபரணி நதியிலிருந்து கால்வாய் அமைத்து பாசன நீரமைப்பு பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
2. விவசாயிகளின் வாழ்வாதாரங்களை காக்க இயற்கை விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய மண்டல நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
3. புதியம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஜவுளித் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
4. சிறு குறு தொழில்கள்/தொழிலாளர்கள் நலிவடைவதை தடுக்க சிறப்பு வாழ்வாதார உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
5. வாகைகுளம் அருகே சிறப்பு தொழிற் பேட்டை அமைக்கப்படும்.
6. கால்நடை உயிரினங்களை காக்க ஊராட்சிகள் தோறும் சிறப்பு கால்நடை மருந்தகங்களுடன் தாகம் தீர்க்க நீர் தொட்டிகள் அமைக்கப்படும்.
7. இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஊராட்சிகள் தோறும் உயர் வகுப்பு பயிற்சி வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
8. பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு/சுயதொழில்/குடிசைத் தொழில் வளர்ச்சிகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
9. பொது மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை அறிந்திட/பெற்றிட கிராமங்கள் தோறும் செயல்திட்ட அலுவலகங்கள் தொடங்கப்படும்.
10. மாற்று திறனாளிகள், முதியவர்கள், மனநலம் குன்றியோர் ஆகியோருக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்திற்கான நிதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
11. குளங்கள், ஏரிகள், நீர் நிலைகள் முறையாக தூர்வாரப்படும்.
12. அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வசதி முழுமையாக வழங்கப்படும்.
13. நிலத்தடி நீர் விற்பனை , ஆக்கிரமிப்பு காற்றாலை, நச்சாலை ஸ்டெர்லைட், எரிவாயு குழாய் பதிப்பு போன்ற மக்கள் விரோத திட்டங்கள் தடுக்கப்படும்.
14. அரசு கல்வி நிலையங்கள்,அரசு சுகாதார மையங்கள்,ஊரக செயல்திட்டங்கள் மேம்படுத்தப்படும்.
15. அணு உலை,நச்சாலை ஸ்டெர்லைட் , நியூட்ரினோ, எரிவாயு குழாய் பதிப்பு, சாகர் மாலா, ஹைட்ரோகார்பன், எட்டு வழி சாலை,மீத்தேன், போன்ற மக்கள் வாழ்வாதார பேரழிப்பு திட்டங்கள் நிரந்தரமாக தடுக்கப்படும்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.