17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொழிலதிபர் தாயாரை ஏமாற்றி 31 பவுன் நகை திருட்டு இராமநாதபுரம் அருகே 13 பேர் மீது வழக்கு..

தொழிலதிபர் தாயாரை ஏமாற்றி 31 பவுன் நகை திருட்டு இராமநாதபுரம் அருகே 13 பேர் மீது வழக்கு..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 4:15 pm

இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்தவர் பசீர் என்ற சிங்கம் பசீர். தொழிலதிபரான இவர் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். பெரிய பட்டினத்தில் உள்ள பசீர் வீட்டில் அவரது தாயார் வசித்து வருகிறார். பெரிய பட்டினம் கிழக்கு தெருவைச் சேர்ந்த மர்சூக் என்பவர் பசீர் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் பசீர் தாயாரை 4/12/ 2018 முதல், 12/4/ 2019 வரை ஏமாற்றி 31 பவுன் நகையை திருடினார். திருப்புல்லாணி போலீசில் பசீர் புகார் அளித்தார்.

விசாரணையின் பேரில் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான 31 பவுன் நகையை திருடியதாக டிரைவர் மர்சூக், ராமநாதபுரம் எம் எஸ் கே நகரைச் சேர்ந்த கவியரசன், பெரிய பட்டினத்தைச் சேர்ந்த செய்யது அபுதாஹீர், அசன் முகைதீன், முகமது பயாஸ் கான், பைசல் சர் புதின், முகமது யூசுப் கான் , பர்ஷித் அலி, சாகுல் ஹமீது , கிழக்கு தெரு சுலைமான் , கருணை வேல் , கற்பககுமார், ரியாஸ் அலி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருப்புல்லாணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!