17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போக்குவரத்து மேலாளர் மீது வழக்கு..

இராமநாதபுரத்தில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போக்குவரத்து மேலாளர் மீது வழக்கு..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 4:11 pm

இராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார், 47. அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றும் இவர், திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கிளை செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் போக்குவரத்து ஊழியர் குறைதீர் கூட்டம் ஏப்.23ல் நடந்தது. இதில் செல்வக்குமாருக்கும், நகர் பணி மனை மேலாளர் பத்மகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஊழியர்கள் தகராறை விலக்கினர்.

இதையடுத்து அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் ஏப்.24 மாலை 6 மணியவில் செல்வக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பத்மகுமார், செல்வக்குமாரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த செல்வக்குமார் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி, கிளை மேலாளர் பத்மகுமார் மீது இராமநாதபுரம் டவுன் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!