17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை மற்றும் வேடசந்தூர் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

நிலக்கோட்டை மற்றும் வேடசந்தூர் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 1:54 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் வேடசந்தூர் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வேடசந்தூரில் ஆத்துமேடு, பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அதே போல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சரக காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுமார் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் கொடைரோடு சுங்கச்சாவடியில் அம்மையநாயக்கனூர் சார்பு ஆய்வாளர் விஜயபாண்டியன் வத்தலகுண்டு போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் செல்லப்பாண்டி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சீட்பெல்ட் அணிவதன் அவசியம், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!