18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார்த்திபனூரில் மலேரியா விழிப்புணர்வு தினம்..

பார்த்திபனூரில் மலேரியா விழிப்புணர்வு தினம்..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 1:47 pm

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பார்த்திபனூரில் மலேரியா நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மலேரியா நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். மனிதர்களை கொசு கடிப்பதால் பரவும் மலேரியாவை ஒழிக்க மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார சுகாதா மேற்பாவையாளர் காந்தி தலைமையில் நடந்தது.

கொசுக்கள் மலேரியா நோய்யை எவ்வாறு மனிதனுக்கு பரவுகிறது. மலேரியா காய்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல் ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்து மலேரியா என உறுதிப்படுத்தப்பட்டால் மருந்து உண்ணும் முறை, மலேரியாவை பரப்பும் கொசுக்களையயும், நீரில் கொசுப்புழுக்களையும் ஒழிக்கும் முறைகள் பற்றி பரமக்குடி சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமி விவரித்தார். சுகாதார ஆய்வாளர்கள் சாகுல் ஹமீது, நிர்மலா, ராஜசேகர், சுப்ரமணியன், வேல்சாமி, கோவிந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். மலேரியா நோய் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!