18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேண்டும் வளரிளம் பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை..

நிலக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேண்டும் வளரிளம் பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 10:58 am

நிலக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேண்டும் என்று வளரிளம் பெண்கள் கூட்டமைப்பினர்கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சைல்டு வாய்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக வளரிளம் பெண்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு நிர்வாக அறங்காவலர் அண்ணாத்துரை தலைமை வகித்தார்பி ரிடம் பண்ட் நிர்வாகிகள் காலின், திரிபுரசுந்தரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிலக்கோட்டை பகுதியில் இளவயது பெண் திருமணத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் நிலக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.  கூட்டத்தில் வளரிளம் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், இறுதியாக  திட்ட மேலாளர் ரம்யா நன்றி கூறினார்.  கூட்ட ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் கள் சிவனகா ஜோதி, பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!