17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை அருகே தண்ணீர் கேட்டவரை திருடன் என பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு..

நெல்லை அருகே தண்ணீர் கேட்டவரை திருடன் என பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2019, 11:43 pm

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் கடையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரும்பு நகர் கிராமத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் யாதவ் (27) வசித்து வருகிறார்.

இவர் அருகிலுள்ள ஆலங்குளத்தில் பிரபல தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருடன் வேலை பார்ப்பவர் தனது வீட்டு விருந்துக்கு வரும் படி அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று விருந்து முடித்து திரும்பும் போது சற்று மது போதையில் இருப்பதால் தள்ளாடி நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாகம் ஏற்பட விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் குடிக்க தண்ணீரை ஹிந்தியில் கேட்டுள்ளார். இந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் இறங்கி திருடன் என நினைத்து தாக்கியுள்ளனர்.

தப்பித்து ஒட ஊர் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதனை தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!