நாம் தமிழர் கட்சி சார்பில், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (24ம் தேதி) வெளியிட்டார்.
அதன்படி, திருப்பரங்குன்றத்தில் இரா.ரேவதி, அரவக்குறிச்சியில் பா.க.செல்வம், ஓட்டப்பிடாரத்தில் மு.அகல்யா, சூலூரில் வழக்கறிஞர் வெ.விஜயராகவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள், இன்னும் ஒருசில தினங்களில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.




You must be logged in to post a comment.