18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் திடீர் மறியல்.. போக்குவரத்து பாதிப்பு.. கல்வீச்சு..

மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் திடீர் மறியல்.. போக்குவரத்து பாதிப்பு.. கல்வீச்சு..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2019, 2:30 pm

மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்களை, உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி. மேலூர் – மதுரை சாலையில், குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைகளில் கம்புகள் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் பேருந்து மீது கல்வீச்சு நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

போராட்டத்தில் ஈடு ப்பட்டவர்களிடம் மேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுபாஷ்,  வட்டாசியர் சிவகாமிநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை, இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் டி.ஐ.ஜி பிரதீப் குமார், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதே போல் கல்வீச்சு, மற்றும் தடியடி நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல்த்துறை எஸ்.பி மணிவண்ணன் நேரில் விசாரனை, அப்பொழுது  தடியடிக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்பியிடம் கோரிக்கை வைத்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!