17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே குடும்ப தகராறில் ஒருவர் தீக்குளிப்பு..

பாலக்கோடு அருகே குடும்ப தகராறில் ஒருவர் தீக்குளிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2019, 2:22 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த செம்மநாத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் சிவலிங்கம் 45 வயது மனைவி காவேரியம்மாள் 38  சிவலிங்கம்  மற்றும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது  சிவலிங்கம் கூலித் தொழிலாளி காவேரியம்மாள் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார் இவர்களுக்கிடையே சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது சிவலிங்கம் தனது மனைவியை பூ வியாபார வேலைக்கு போக வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் காவேரியம்மாள் அடம்பிடித்து பூ வியாபாரம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் செல்வதனால் நேற்று இரவு இருவருக்கும் பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இரவு 9 மணிக்கு சிவலிங்கம் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் அக்கம்பக்கம் உள்ளனர் உடனடியாக தீயை அணைத்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பாதிவழியிலேயே சிவலிங்கம் உயிரிழந்துவிட்டார்.  இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!