18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் வெள்ளரி ஊறுகாய் தொழிலாளர்கள் நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…

நிலக்கோட்டையில் வெள்ளரி ஊறுகாய் தொழிலாளர்கள் நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 10:59 pm

நிலக்கோட்டையில் வெள்ளரி ஊறுகாய் தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது.  அதில் நீக்கப்பட்ட நூறு தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்க, கோரி நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பப்டி சாலையில் வெள்ளரியிலிருந்து ஊறுகாய் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தனியார் தொழிற்சாலை (ஐ.ஏ.பி மில்)உள்ளது இங்கு 600 பேர் வேலை செய்கின்றனர். அதில் 4 பேரை நிர்வாகம் அவர்களது பெங்களுர் தொழிற்சாலைக்கு மாற்றியதை கண்டித்த நூறு பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

அப்பணி நீக்கத்தை கண்டித்து வேலை நீக்கம் செய்யப்பட்ட நூறு பேரை மீண்டும் வேலைக்கு சேர்க்ச  வலியுறுத்தியும் நிலக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு ஐ.ஏ.பி தொழிலாளர் முன்னணி தலைவர் தேவகுமார் தலைமை வகித்தார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்,  நிர்வாகி தமிழ் வேந்தன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டதில் இனவெறி போக்கை கைவிட கோரியும் ஒரிசா, ஆந்திரா தொழிலாளர்களை கொண்டு வந்து உள்ளூர் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை மாற்றக் கோரியும், நிறுத்திய தொழிலாளர்களை சேர்க்க கோரியும் பலர் வலியுறுத்தி பேசினர். அனைவரும் தொழிற்சாலையை கண்டித்து கோஷமிட்டனர். நிலக்கோட்டை இன்ஸ்பக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!