17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக 27/04/2019 அன்று +2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் சத்தியபாதை மாத இதழ் அறிமுக விழா..

சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக 27/04/2019 அன்று +2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் சத்தியபாதை மாத இதழ் அறிமுக விழா..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 10:44 pm

கீழக்கரையில் 27/04/2019, சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் ஹுசைனியா மஹாலில்  2019ம் வருட மேல்நிலை தேர்வில் கீழக்கரையில் உள்ள பல்வேறு பள்ளிகளில்  முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா சத்தியபாதை அறக்கட்டளை சார்பாக நடைபெற உள்ளது.  முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, மாணவர்கள் மற்றும் பள்ளி விபரங்கள் கீழே வருமாறு:-

  • N.ஃபத்தையா பேகம், 577/600, ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளி,
  • S.ஆமினத் நிஸ்ஃபா,563/600 ஹமீதிய்யா ஆங்கில வழி மேல் நிலைப்பள்ளி.
  • K.ரிஃபத் ஹசினா, 562/600, இஸ்லாமியா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி.
  • M.சுவாதி, 533/600, ஹைரத்துன் ஜலாலியா மேல் நிலைப்பள்ளி.
  • B.செய்யது ரசியம்மாள், 519/600, மக்தூமியா மேல் நிலைப்பள்ளி.
  • R.தருண் சாய்ராம், 509/600 ப்யர்ல் ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி.
  • A.ஆதித்யன்., 496/600, ஹமீதியா ஆண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி.
  • M.ஃபாத்திமா ஃபவுமினா, 492/600, முகைதீனியா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி.
  • ஹைருன் இபாதா, 458/600, தீனிய்யா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி.

இந்த விழாவின் தொடர்ச்சியாக கீழக்கரையில் சமூக சேவை புரியும் மூன்று நபர்களுக்கும் அவர்களின் சேவையை கௌரவிக்கும் வண்ணம் பாராட்டு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட உள்ளது.

பின்னர் இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வான சத்தியபாதை மாத பத்திரிக்கையின் அறிமுக விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!