17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு..

இராமேஸ்வரத்தில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 5:55 pm

சமீபத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் மற்றும் அச்சமுகத்தைச்சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், பொன்னமராவதி கிராமத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்த ஆயிரம் பேரின் வழக்கை நிபந்தனையின்றி ரத்து செய்ய வழியுறுத்தியும், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே குறிப்பிட்ட சமூக மக்கள் இன்று (23/04/2019) மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போக வைத்தனர். இச்சம்பவத்தால் மதுரை-ராமேஸ்வரம் தேசிய சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!