18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூடுதல் பாரம் ஏற்றி வந்த வாகனம் சாய்ந்து விபத்து..

கூடுதல் பாரம் ஏற்றி வந்த வாகனம் சாய்ந்து விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 5:32 pm

மதுரை பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். இவருக்கு சொந்தமான லோடு ஏற்றும் வண்டியில் அதிக பாரம் கொண்ட கம்பிகளை ஏற்றிக்கொண்டு மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வண்டி நிலை தடுமாறி அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் லோடு வேன்கள் மீது சாய்ந்தது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு , அதிக பாரம் ஏற்றி வந்த வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அதிக ஆள் நடமாட்டம் இருக்கும் அப்பகுதியில் திடீரென வண்டி சாய்ந்த சமயம் அங்கு ஆட்கள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபோன்று அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வரும் வண்டிகள் மீது போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!