18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணியில் இருக்கும்போது விபத்தில் இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு, தமிழ்நாடு காவலர் காப்பீட்டு திட்ட நிதி ..

பணியில் இருக்கும்போது விபத்தில் இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு, தமிழ்நாடு காவலர் காப்பீட்டு திட்ட நிதி ..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 5:24 pm

தமிழ்நாடு காவலர் காப்பீட்டு திட்டத்தின் (Tamilnadu Police Insurance Scheme) மூலம் பணியில் இருக்கும்போது சாலை விபத்துக்குள்ளாகி இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு நேற்று (22.04.2019) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலா ரூபாய் 2,00,000/- மதிப்பிற்கான காசோலையை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் 03.04.2017 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். தூத்துக்குடி ஆயுதப் படையில் பணியாற்றி வந்த காவலர் திரு. சிவ முருகன் என்பவர் 20. 12.2017 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு காவலர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்ராஜ் என்பவரது மனைவி தமிழ் செல்வி ,மற்றும் காவலர் சிவமுருகன் என்பவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகிய இருவருக்கும் தலா ரூபாய் 2,00,000/- பணத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் அந்தோணியம்மாள், மற்றும் இளநிலை உதவியாளர் சேர்மதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!