17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி வீரர்களுக்கு பரிசளிப்பு…

நிலக்கோட்டையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி வீரர்களுக்கு பரிசளிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 1:20 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பாரத் வாலிபால் கழகம் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு மு. வ. மாணிக்கம் அன் கோ ஒளிமய உரிமையாளர், நிர்வாகியுமான ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். கழகச் செயலாளர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.

நிலக்கோட்டையில் நடந்த போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், 22 அணிகள் போட்டியில் கலந்து கொண்ட விளையாடினார்கள். இப்போட்டியின் முதல் பரிசை நிலக்கோட்டை பாரத் வாலிபால் கழக அணி வீரர்கள் தட்டிச் சென்றனர். இரண்டாம் பரிசை சின்னாளபட்டி காந்திகிராமம் பல்கலைக்கழக அணி வீரர்கள் தட்டிச் சென்றனர். மூன்றாம் பரிசை வடுகபட்டி அணி வீரர்கள் தட்டிச் சென்றனர். நான்காம் பரிசு பெரியகுளம் அணி வீரர்கள் தட்டிச் சென்றனர்.

இவ்விழாவில் மதுரை ராஜாஜி மருத்துவமனை கல்லூரி டாக்டர் மீனாட்சி சுந்தரம், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன், கழக மூத்த உறுப்பினர்கள் ராமச்சந்திரன், முத்துக்கருப்பன், குணசேகரன், வீட்டு வசதி கடன் சங்க தலைவர் நாகராஜன், மற்றும் கிராம பொதுமக்கள். கழக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கழக பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார். படவிளக்கம் : நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மு . வ. மாணிக்கம் அன் கோ உரிமையாளரும், கழக நிர்வாகியுமான ஜெயச்சந்திரன் பரிசு வழங்கிய போது எடுத்த படம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!