18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!

சூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 1:07 pm

அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பார்கள் பெயர்கள் 10 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அதேபோல அமமுகவும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது.

ஆனால், அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு பெ.மோகன், சூலூர் தொகுதிக்கு வி.பி.கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எஸ்.முனியாண்டி, அரவக்குறிச்சி தொகுதிக்கு செந்தில்நாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!