17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி பேருந்து நிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து-ஜவுளிகள் எரிந்து நாசம்..

தென்காசி பேருந்து நிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து-ஜவுளிகள் எரிந்து நாசம்..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 11:08 am

நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்காசியில் பழைய பேருந்து நிலையம் அருகே அம்மன் சந்நிதி தெருவில் உள்ள செலிப்ரேஷன்ஸ் என்ற ஜவுளிக்கடையில் 23.04.19 இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த ஆடைகளும், பொருட்களும் தீயில் கரிந்து நாசமாகின. தீயணைப்பு படை வீரர்கள் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைத்தனர்.

கடந்த சில நாட்களாகவே நெல்லை,தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையும் சூறைக்காற்றும், மின்னல்வெட்டு மற்றும் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் மின்னல் தாக்கி இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!