18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் தண்டவாளத்தில் தலை வைத்து பெண் தற்கொலை..

இராமேஸ்வரம் தண்டவாளத்தில் தலை வைத்து பெண் தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2019, 11:05 am

இராமேஸ்வரம் ரயில் நிலையம் மூன்றாவது நடை மேடையில் இருந்து நேற்று (21/4/19) இரவு 8:15 க்கு புறப்படும் சென்னை ரயிலின் (சேது எக்ஸ்பிரஸ்) சக்கரத்தில் தலையை வைத்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அப்பெண் மஞ்சள் நிற சேவை அணிந்திருந்தார். அவரது வலது கையில் கே. ராஜேந்திரன் என பச்சை குத்தப்பட்டு இருந்தது.

ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு எஸ்.ஐ., தனுஷ்கோடி தலைமையில் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!