17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த பெண் அதிகாரி குறித்த முழுமையான விசாரணை நடத்திட வேண்டும் : ராஜ் சத்யன் கோரிக்கை..

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த பெண் அதிகாரி குறித்த முழுமையான விசாரணை நடத்திட வேண்டும் : ராஜ் சத்யன் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2019, 9:51 am

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பெட்டிகள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி, வாக்குப் பெட்டி அடுக்கி வைக்கப்பட்ட மையத்தின் அருகே உள்ள அறைக்கு உள்ளே சென்ற பெண் வட்டாட்சியர் சம்பூரணம் இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ள மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் காரணமின்றி பெண் அதிகாரி மாவட்ட ஆட்சியரின் அனுமதி இன்றி உள்ளே நுழைந்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.

என்னுடைய சார்பில் எங்களது வழக்கறிஞர் அணியினர்  மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிடுவதோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளேன். அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட பிறகு என்ன உள்நோக்கத்துடன் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது எங்களுக்கும் கேள்வி எழுகிறது என்றார். நடைபெற்ற சம்பவங்களை செல்போனில் வீடியோ எடுத்தவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டிக்கத்தக்கது செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் அதிமுகவினரா எனவும் கேள்வி எழுப்பினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!