18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றால அருவிகளில் கொட்டும் குளு குளு நீர் வீழ்ச்சி …

குற்றால அருவிகளில் கொட்டும் குளு குளு நீர் வீழ்ச்சி …

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2019, 12:06 am

குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பெய்த மழையால் அங்கு மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிமாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கே அச்சத்துடன் காணப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக வெயிலை தணிக்கும் வகையில் நல்ல மழை பெய்தது. 21.04.19 இன்று மதியம் நெல்லை மாவட்டத்தின் கூடங்குளம், உவரி, திசையன்விளை, இட்டமொழி,  நாங்குநேரி ஆகிய பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது.

இதனால் குற்றாலம் பகுதிகளில் பெய்த மழையால் அங்கு மெயினருவி உள்ளிட்ட மற்ற அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் அங்கு வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!