17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்சி பொருளாக பயனின்றி கிடக்கும் அரசு நிதியில் வழங்கப்பட்ட டிராக்டர்..

காட்சி பொருளாக பயனின்றி கிடக்கும் அரசு நிதியில் வழங்கப்பட்ட டிராக்டர்..

எழுதியவர்: ஆசிரியர் April 21, 2019, 8:54 pm

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் விளாச்சேரி கிராமத்துக்கு  2017-18 நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டு ஒரு டிராக்டர் வழங்கப்பட்டது.

இப்பொழுது அந்த ட்ராக்டர் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் மண்ணோடு மண்ணாகி காட்சி பொருளாக இருக்கிறது. மேலும் அந்த ட்ராக்டர் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளதாகவும் மக்களின் வரிப்பணம் அரசு அதிகாரிகளால் வீணடிக்கப்படுவதாகவும், இந்த டிராக்டரை இயக்க பலமுறை அதிகாரிகளிடம் தகவல் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவ்வூர் மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இப்பொழுது அந்த ட்ராக்டர் மழையிலும் வெயிலிலும் காய்ந்து துருப்பிடித்து மண்ணோடு மண்ணாய் கலந்து கொண்டு இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!