மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் லோடுமேன்கள் மதுரை ராகவன் – கருகப்பிள்ளை ஆறுமுகம் ஆகிய இருவரும் உசிலம்பட்டி பூ மார்கெட்டில் லோடுமேன் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் குடி போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆறுமுகம் ராகவனை கத்தியால் குத்தியுள்ளார். ராகவன் ஆறுமுகத்தை சாக்கு தைக்கும் ஊசியால் குத்தியுள்ளார்.
சம்பவமறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் இருவரையும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராகவன் மதுரை அரசு மருத்துவமனணக்கு கொண்டு செல்லப்படடார். இது தொடர்பாக போலிச்சார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.






You must be logged in to post a comment.