17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சத்திரக்குடி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல்

சத்திரக்குடி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல்

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2019, 6:16 pm
சத்திரக்குடி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் ஒரு பெண் உள்பட 18 பேர் மீது வழக்கு ஆறு பேர் கைது இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தென்னவனூரில் 14/4/2019 ல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் போட்டோ மீது மை தெளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே 16/4/2019ல் தகராறு ஏற்பட்டது. தேர்தல் முடிந்ததும் சமரசம் பேசி கொள்ளலாம் என இரு சமூகத்தினர் முடிவு செய்தனர். இது தொடர்பாக 20/4/2019 ல் இரு தரப்பினரும் சட்ட விரோதமாக கூடி மோதலில் ஈடுபட்டனர். இம்மோதலில் தென்னவனூர் திபாகர் என்பவரது வீடு சூறையாடப்பட்டது. கல் வீசி தாக்கிய தில் படுகாயமடைந்த பாரதி ராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதி ராஜ் புகாரில் திபாகர், இவரது சகோதரி செல்வி உள்பட 9 பேர் மீதும், திபாகர் புகாரில் பாரதி ராஜ், கவிகுமார், சரண், கார்த்தி உள்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திபாகர் 23, எல்.கருங்குளத்தைச் சேர்ந்த செல்வம் 31, வினித் 20, கவுதம் 20, மனோஜ் 20, மணிவண்ணன் 37 ஆகியோரை இன்ஸ்பெக்டர் பூமா கைது செய்தார். தென்னவனூர், எல்.கருங்குளம் கிராமங்களில் நிலவும் பதற்றத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!