18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கொடி குளத்தில் தேர்தல் தகராறில் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்..

உசிலம்பட்டி அருகே கொடி குளத்தில் தேர்தல் தகராறில் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2019, 2:34 pm

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடி குளத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கொடிக்குளம் அண்ணா திமுக ஊராட்சி கழக செயலாளர் முருகன் வீட்டில் புகுந்து தாக்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது சம்பந்தமாக வாலாந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அண்ணா திமுக செயலாளர் முருகன் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காலை 7 மணி அளவில் கொடிக்குளம் கிராமத்தில் மதுரையில் இருந்து வந்த பஸ்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் ஆதரவாளர்கள் தாக்கியதில் அண்ணா திமுக ஊராட்சி செயலாளர் முருகன் குடும்பத்தினர் கருப்பாயி ரகுராமன் ராமு முருகன் மகேஸ்வரி மோகன் சன் மோகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பஸ் மறியல் செய்தனர் செல்லம்பட்டி அண்ணா திமுக ஒன்றிய செயலாளர் ராஜா இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதைத் தொடர்ந்து பஸ் மறியல் கைவிடப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!